Tuesday, September 2, 2014

தொலைந்து போகா கவிதை..



காதல் விதை 
எல்லோருக்குள்ளும் 
இறைந்து கிடக்கிறது !

ஏதோ ஒரு 
மழைக்காலத்தில்
அந்த காளான் 
பூத்து இருக்கலாம்  !

ஏனோ
யார் கண்ணிலும் படாமல்
காற்றில் கரைந்தும் போயிருக்கலாம் !

ஆனால் 
இங்கு சொல்ல வந்த 
காதலை விட 
பாதியில் தொலைந்து போய்
வலிக்கும் காதலே அதிகம் !

காலம் தொலைத்த காதல் 
கூடவே வருகிறது நிழலாய்
உள்ளங்கால் நெருஞ்சி முள்ளாய்
குத்துகிறது பல நாள் !

தொலைந்து போகட்டும் என்று 
உதறி நடந்தால் தோளை விட்டு
காலை கவ்வுகிறது 
சவலைப் பிள்ளையாய்..

கண்ணை மூடினால் 
வானமும் ,பூமியும் 
மறைந்து போகிறது

ஆனால் காதல் மட்டும் 
கனவிலும் வந்து 
கட்டி கொள்கிறது ..

தேடாத போது 
வந்த புதையலா
தேடும் போது வந்த 
மறதியா காதல்?

தெரியவில்லை 
புரியவில்லை 
ஆனால் 
தினமும் பூக்கிறது .. 

No comments:

Post a Comment