யாரோடும் கோபமில்லை
யாரோடும் விருப்பமும்
இல்லை
வெகு தனியாய்
விலகி நடக்கிறேன்
வயதின் பக்குவமா
வாலிபத்தின்
மூடுவிழாவா
உயரமான மரமும்’ மலையும்
உண்மையை மெலே காட்ட
எனக்குள் பசியாய்
என்னை தேடி
தொலைக்கிறேன்
கனவுகளின் தோட்டத்தில்
கதவுகளை தேடுகிறேன்
நிஜத்தின்
விலாசத்தில்
நிழலை தேடுகிறேன்
முடிக்க தெரியாத
கவிதைகளின்
முடிச்சுக்குள்
தவிக்கிறேன்
முதலும் கடைசியும்
முழுதல்லவென உணர்கிறேன் ...
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/06/blog-post_13.html?showComment=1402631677376#c4771738721863922113
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-