Wednesday, April 2, 2014

கரை சேராத ஓடம் .



..

சகல  காதலும் 
நீண்ட பாதையை
கடந்துதான் வருகிறது ..

எப்போதும் 
அடுத்தவர் காதல்
அற்பமாகத்தான் தெரியும்..

இனிப்பும் கசப்பும் 
என் நாக்கு  
சுவைக்கும் வரைதானே !

வரும் திசையின் 
விலாசம் தராத காதல் 
போகும் போது 
தோல்வியெனும் பட்டம் 
தந்து விட்டு போகிறது !


காதல் சுழலில் 
சிக்காத இதயம் 
அனேகமாக 
திசை தொலைத்த 
கப்பல் தான் 

கனவுகள் இல்லாதது 
நல்ல தூக்கம் 
காதல் இல்லாதது 
வாழாத  வாழ்க்கை 

காதல் இளமைக்கு 
மட்டும் சொந்தமல்ல 
வாழ்க்கையில் இனிமையெனும் 
 உள்ளே வழியும் 
ஓசை படாத ஊற்று
தீராத வரை தொடரும் ..








No comments:

Post a Comment