இப்போதும்
யாரோ எங்கோ
அவள் பெயரை
உச்சரித்தால் விரல் நகத்திற்குள்
மின்சாரம் பாய்ந்தார் போல சிலிர்க்கிறது !
இதைச் சொன்னால்
மற்றவர்கள் சிரிக்கிறார்கள்
நீ பார்த்த அழகு
இப்போது அவளிடம் இல்லை
காலம் களவாடி விட்டது என்கிறார்கள்
அவள் அழகு எப்போது
வெளியே தெரிந்திருக்கிறது
இவர்கள் பார்க்கும் போது ?
No comments:
Post a Comment