அம்மா என்ற
என் ஒற்றை சொல்
முகவரி தொலைந்து விட்டது !
அம்மா இல்லாத வீடு
நிலவு தொலைந்த
வானம் போல
இருண்டு கிடக்கிறது !
சொந்த ஊரில்
அனாதை போல சோர்ந்து
கிடக்கிறோம் நாங்கள் !
அம்மா எங்கு இருக்கிறாய்
யார் அழைத்தார்கள்
ஏன் போனாய் ?
பூமி சலித்து விட்டதா
புதல்வர்கள் வெறுத்து விட்டதா
புண்ணியம் பழுத்து விட்டதா?
கேட்கிறார்கள் பலர்,
அம்மா தவறிவிட்டார்களா ?
எப்படி சொல்வது ?
அம்மாவிடம் தவறிய
அனாதைகள் நாங்கள் என்று !
வா என்றும் அழைக்கும்
குரல் வீட்டில் இல்லை
பொட்டு வைத்த
அம்மாவின் ஃபோட்டோ
மட்டும்தான் சிரிக்கிறது !
வலிக்கிறது .
வாழும்போது உங்களுக்கு
கொடுத்த சுமைகளை ,
மன்னிக்க சொல்லி கேட்க்க
யாரை தேடுவேன் பூமியில் இனி .?
உரக்க கத்துகிறது மனம்
இரக்கம் இல்லாத இறைவா
மரணத்தின் பயணம் ஓயாதா ?
வணக்கம்
ReplyDeleteஅம்மாவுக்கு வடித்த இரங்கல்ப்பா. அம்மாவின் நினைவை தித்திக்கிறது... அம்மாவின் ஆண்மா சாத்தியடைய இறைவனைப்பிராத்திக்கிறேன்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எல்லோரும் இதே போன்ற வலிகளை காலம் கடந்து தான் சுமக்கின்றோம்.
ReplyDelete