Wednesday, September 24, 2014
அழகு + ஆபத்து = வாழ்கை .
ஓடி கொண்டு இருக்கும்போது
ஒன்றும் தெரிவதில்லை
தேடி கொண்டு
இருக்கும் போதும்
தீரவில்லை வாழ்கை
திரும்பி
பார்க்கும்போது மட்டும்
தொலைவில் நின்று
வாழ்வை
ரசித்தவன்
துக்கப்படுவதில்லை
தொலைந்து போன வாழ்வை
தேடியவன் சந்தோசப்படவில்லை
மனிதன் படைப்பு இறுதி
செய்யப் பட்டதுதான் –ஆனால்
உறுதி செய்யப்படாத
ஆபத்தை ரசிப்பவன்
வாழ்வை நேசிக்கிறான் 1
ஆசையை ருசிப்பவன்
வழுக்கிகொண்டே
போகிறான் .!
அன்பையும் ,கருணையையும்
உடலாயும் , உயிராயும்
கொண்டவன்,
கடவுளின் காவலில் சாவகாசமாக
கதை படித்து
கொண்டிருக்கிறான் !..
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-