கை பேசிகளின்
கனவுகள் மெய்பட
கடவுள் அனுப்பி வைத்த
குட்டி தேவதைகளா இவை ?
இநத ஆண்ட்ராயிடு
மென்பொருள் எனும் கவிதை ,
ஒன்று புரிவதர்க்கு முன்னரே
வேறு ஒன்று குதிக்கிறது முன்னே !
தொடு திரை கைபேசிகளின்
வரங்கள் போல - இங்கு
தேடுவதெல்லாம் கிடைக்கிறது
தேடாததும் துரத்துகிறது .!
அன்று விதைத்த மொச்சை
பயிர் போல முழிக்கும் இவர்கள்
உலகின் ஏதோ ஒரு படைப்பாளியின்
அறிவின் விதைகள் - இதை
எல்லோரும் அனுபவிப்பதால்
இறைதூதன் என சொல்லவா உன்னை
இல்லாதது இல்லையென்பதாய்
இருக்கும் அட்சய ஆண்ட்ராயிடே
உன் தேவை என்னை
தேவதை என அழைக்க வைத்தது .
No comments:
Post a Comment