Thursday, June 19, 2014

மன வெளி பயணங்களில்...



வாழ்கையில் நிறைய 
தொலைந்துபோய் இருக்கிறது 
மனதை தவிர ..



வாழ்வே தொலைந்து 
போன போது -அதை 
மனது மீட்டு தந்தது .


பால்ய நட்பு 
பிரிந்த போது அதை 
படிப்பு ஈடுசெய்தது.


அறியாத காதல் 
புரியாமல் தேய்ந்தபோது 
வாலிபம் மீட்டெடுத்தது .


பள்ளிக்கூடம், படிப்பை 
கெடுத்த வேளையில்
கல்லூரி கரை சேர்த்தது .










வாழ்கை சவால்கள் 
வாரி சுருட்டியபோது 
உத்தியோகம் உருக்கொடுத்தது 


காதல் சோழிகள் 
உருட்ட பட்டு போது 
கல்யாண பழம் பழுத்தது .


குழந்தை வரம்  
கேட்ட போது 
கடவுள் வந்து பிறந்தார்


கிடைக்காத அத்தனையும் 
கிறுக்கு பிடிக்க செய்யும்போது 
புத்தகங்கள் தெளிவாக்கியது 


காமமும் வாழ்கையும் 
கண்ணாமூச்சி ஆடும் போது 
அன்மீகம் அரவணைத்து கொண்டது.


எதிர்காலமும் ,இறந்த காலமும் 
காலத்தில் கரைந்து போக 
மனமே தொலைந்து போனது.

2 comments:

  1. வணக்கம்

    ெ படத்துக்கு உரிய கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி (ஆனால் இங்கு நான் கவிதைக்குத்தான் படம் தேடியுள்ளேன் .)

      Delete