Tuesday, June 17, 2014

எனக்கு பிறக்காத நிலவுகள்..



என் இல்ல தோட்டத்தில் 
பெண் மலர் - ஒன்று 
பூக்க வேண்டும் என்பது
வெகுநாள் ஆசை..


காதல் கல்யாண தோட்டங்களில் 
ஆண் மலர் மட்டும் 
பூக்கட்டும் என்பது 
எழுதப்படாத சட்டமா ? 


சாதிகளின் வேரில்
காதல் நீர் பாய்ந்து 
கல்யாண வசந்தம் வந்தாலும் 
பெண் மகள் மட்டும்
இன்னும் சாபம்தானா?


சமூகம் காலத்திர்கேற்ப 
உடை மாற்றி கொள்ளும்
பெண் மகள் ஏன் வேண்டாம் 
என்பதர்க்கு  விடை மட்டும்  
காலம் முழுதும் 
தொலைந்து போகுமா?



எங்கோ பிறந்த என்னையே 
ஏற்றுக்கொண்ட பெண் வீடு, 
இங்கு ஒரு பெண் தேவதை
தேடித் தவழ மட்டும் தடையா?


பெண்ணே!
 தாயாய் தாரமாய்
சக்தியாய் ,இயக்கமாய் 
ஆளும் உயிரே 
உன்னை
தனியே  பார்க்க 
தனியாதஆசை ...


No comments:

Post a Comment