விழித்தவுடன் தேடும்
பக்கத்து படுக்கையும்..
விழிக்க வைக்கும்
உன் கொலுசு சத்தமும் ..
காத்து இருக்கும்
காலை டீயும்,உணவும் ..
எப்போது வருவீங்க
என்ற ஏக்க குரலும்..
மறக்க நினைத்தாலும்
துரத்துகின்றன.
மெல்ல கொடியில் - உன்
அசையும் துணிகளும் ..
கோளம் தொலைந்த
வாசல்களும் ..
பூட்டி செல்லும் கதவுகளும்
திறந்து வைக்கின்றன..
உன் நினைவுகளின்
வாசனையை ..
இன்னும் எத்தனை காலம்
வலிகளோடு காத்து இருப்பது ?
No comments:
Post a Comment