வயது தன் பயணத்தில்
தொலைக்கும் முதல்
முகவரி
காதல் .!
சொல்ல முடியாத காதலின்
அந்த ஒற்றை வார்த்தை
கனம் யாருக்கு
புரியும் ?
எவளோ ஒருத்தி
இது காதல் இல்லை
நட்பு என்ற போது
என் அழுத முகம்
எனக்கே சகிக்கவில்லை !
அறிவின் நட்பில்
ஆழக்காதல் யாசித்த
போது
யோசித்து பின் நாளில்
அவள்
அண்ணனாக்கி போனதுண்டு .
பணியிடத்து காதல்
போதாத சம்பளம் போல
மனதை நிரப்பவில்லை.
என் காதல்
வயதான போது
கல்யாணம் கரைசேர்த்தது.
வாலிப காதல்
எதிர் கரை என்று
அப்போதுதான் புரிந்தது .
சிலருக்கு இது
காதலர் தினம்
எனக்கோ என்
காதலின் நினைவு தினம்.
:) சரியாகத்தான் இருக்கிறது!
ReplyDelete40 வயதில் உங்களுக்கு காதலின் உணர்வு புரிந்து இருந்தால் நீங்கள் காதலிக்கப்படுபவராக இருந்தால், பகிரும் தகுதியிருந்தால் நாம் அனைவரும் காதல் என்ற உணர்வை சரியாக புரிந்து வைத்தவர்கள்.
ReplyDeleteஎன் பதிவை விட உங்கள் விமர்சனம் நிதர்சனமாக இருக்கிறது
Delete