எப்போது நான் குதிரையாய்
பிறந்தேனோ தெரியவில்லை ?
எகிறி பாய்ந்து எங்கு
அலைந்தேனோ தெரியவில்லை !
மலைகளை பார்த்தால்
தாண்டுகிறேன் !
குளங்களை பார்த்தால்
மூழ்குகிறேன்!
பெண் ஆண் புரவி
எது பார்த்தாலும் மோகிக்கிறேன் !
ஓடி பாய்ந்து ஓய்ந்தாலும்
உள்ளுக்குள் சாய்வதில்லை .
உறங்கினாலும் விழித்தாலும்
கனவுகள் முடிவதில்லை.
கனைத்தாலும் செருமினாலும்
கவனம் மட்டும் இங்கில்லை.
தேடினாலும் தொலைத்தாலும்
நினைவுகளில் தடமேதும்மில்லை .
குளம்புகளை நம்பி ஓடுகிறேன்
தூரங்கள் மட்டும் ஓயவில்லை .
குலம்புகளை நம்பி மட்டும் இல்லை உடல் வலிமையை நம்பியும் ஓட வேண்டியிருக்கிறதுதான்,குளம்பு உடலின் ஓர் அங்கம்தானே/
ReplyDelete