Wednesday, August 20, 2014

ஏனோ தெரியவில்லை ?



எத்தனைதான் வண்ணங்கள் 
கோர்த்து வழிந்தாலும் 

இழை இழையாய் 
பிண்ணி படர்ந்தாலும்

நிழல் படத்தின் கருமையே
நிஜ அவதாரமாகிறது !

கடந்து போன 
காலங்களின் சுவடுகள், 

அந்த வெண்மை நிறத்துக்குள்
எட்டிபார்க்கும் வெட்க்கமாய்

அங்கே நினைவுகளின் 
ஆழம் நீண்டதாகி போகிறது

கருப்பு வெள்ளையும,
கலையாத நிழல் படிவம் 

காலத்தின் தோன்றல் 
ஒளியில்லாத இடமென்பதால், 

பிம்பங்களில் பிரதிபலிக்கும்போது 
மனதை ஆளுகிறதோ ?


1 comment:

  1. கருப்பு எப்போதுமே ஒரு தனியழகுதான்/

    ReplyDelete