உள்ளிருக்கும் ஓயாத
அலை மனதை
அளக்க கருவியில்லா
என் மக்கா
வெகு தூர கோள்களுக்குள்
எதை வைத்தாய்
தேடி சுமக்க ?
கல்லும் நீரும்
சூடும் காற்றும்
சொல்லும் கதையறியா
குருட்டு விஞ்ஞானமே
கட்டிய கோவணத்துடன்
சுற்றிய என் சித்தன்
விட்டு சென்ற மெய்ஞானத்தை
என்று உணர்வாய் ?
வெளியே ஓடி ஓடி
ஓயந்தாலும் உள்ளுக்குள்
புதைந்து கிடக்கும்
’வெளியை’ புரியாத
உன் விஞ்ஞானம்
கொட்டிய வண்ணமெல்லாம்
ஓவியம் என்பான்
இருட்டும் ஏகமும்
என் சொத்தென்றானே
அவன் ஓலைகளை
இனியாவது புரட்டு
அங்கே உன் நுண்ணோக்கியின்
சாதனைகள் வெறும் குப்பைகள் தான் என
முன்னோக்கியே அவன் பார்த்தை
அறிவாயே என் மக்கா என் மக்கா !
No comments:
Post a Comment