Thursday, September 26, 2013

வண்ண நிழல்கள்…




நீண்ட எனது கனவுகளில்
அவளின் வண்ண நிழல்கள் 
ஓய்வில்லாமல் துரத்துகிறது ...



மன்னிக்க விரும்பாத 
அவள் காதல் மறுப்பு ,
வருணிக்க முடியாத
எனது வலிகளாய் 
கனவுகளில் தொடர்கிறது..



தோற்று போன 
என் காதல் அம்பு
தோய்த்த ரத்த ஈரம் 
காய்ந்து போக 
என் கனவுகள் விடுவதில்லை...




எனது  கனவுகளில்
அவள் வந்து போன 
காயத்தின் கதை சொல்லலாம்,
ஆனால்,
அதன் உயிர் வலிகளை
உரக்க சொல்ல மொழி இல்லையே !

No comments:

Post a Comment