எப்படி இருக்காய்
என் அன்பே !
சுவாசம் எனும்
நூழிலை அறுந்த போது
நம் காதல்
எங்கு போனது ..
கனவில் வருவேன்
என்பாயே பெண்ணே
தூக்கமே எனது துக்கமாகி
நனவில் தொலைந்து போகாவா ?
எந்த கண் பட்டதோ
நம் காதல் மேல் ,
யார் கண்ணிலும்
படாத உன் உருவம்
கரைந்து போக ,
தூங்கு பெண்ணே தூங்கு
நான் வந்து எழுப்பும்
காலம் தூரமில்லை
விதி பிரித்த
காதல் இதுவென்று
அதர்க்கும் இழி பெயர்
வரக்கூடாது .
உடலால் சேர்ந்தால்
ஊணமாகி விடுமோ
நம் காதல்
என்ற தேவனின்
வரமல்லவோ உன் மறைவு
காத்து இரு
மெல்லிய கனவுடன்
காலம் நம்மை விரும்பட்டும் ...
No comments:
Post a Comment