சின்னச் சின்ன போட்டிகள்
சிலேட்டு கிறுக்கல்கள் போல
இன்னும் இருக்கிறது !
மெல்ல மெல்ல வயது
மனதை வெளுத்த போது
கரைந்து போனது ஆயிரம் !
சொல்லச் சொல்ல ஆயிரம்
வாழ்வியல் சம்பவங்கள்
நாம் பேசும் போது அழுத்துப் போவதில்லை !
வெல்ல வெல்லத் தீராத
வாழ்வியல் போட்டிகள்
நாம் கலந்து பேசிய போது கரைந்து போனது !
இல்லை இல்லை இனிமேல்
வேறெங்கும் சுவர்கம் என்பது நட்பில்
தோய்ந்து கிடப்பதை விட !
No comments:
Post a Comment