Tuesday, February 26, 2013

காதல் சித்தன்


சகியே !
எனக்காக நீ எழுதும்
கடிதங்களில்
உனக்கு பிடிக்கவில்லை என்று
கசக்கி எறிந்த அந்த
கவிதை குவியலை
எனக்கே தருவாயா ?
அதை படிக்கும்போது
என் ஆயுள் காலம்
இன்னும் நீடிக்கும்
ரகசியம் இருப்பதாக
காதல் சித்தன் சொன்னானடி...

No comments:

Post a Comment