மெல்ல தனியே
நடக்கும்போதெல்லாம்
காற்றுடன் சேர்த்து - உன்
நினைவுகளும் கை கோர்த்து
அந்த மழை காலங்களை
அசைபோடுகிறது...
வெகு தூரத்தில் நீ.
விலக முடியாத நெருக்கத்தில்
நம் நினைவுகள்....
கை பிடித்தவள்
அருகே இருக்கும்போது
நினைவுகள் மட்டும்
வெகுதூரத்தில் மேய்கிறதே !
என்ன செய்ய
வாழ்கையில்
ஒரே ஒரு முறைதானே
காதல் மரணம் வருகிறது !
//நினைவுகள் மட்டும்
ReplyDeleteவெகுதூரத்தில் மேய்கிறதே !//
Nice One!