Sunday, November 25, 2012

ஓவியத்தின் நிழல்கள்






இயற்கை சிருஷ்டிப்பின்
சூத்திரத்தை  - ஏனோ
ஓவியனிடம் மட்டும்
ஒளித்துக்கொள்ளவிலையோ ?





 இயற்கையும் , ஓவியனும்
தூங்குவதேயில்லை - ஒருவேளை
தூங்கினாலும் தன் துயரங்களை
அவிழ்ப்பதே இல்லை



ஓவியனின் கைகள்
தூரிகையை வைத்துவிடலாம் !
அவன் கண்கள் -உள் இமையில்
எழுத  தொடங்கிவிடும் ..




  வண்ணங்கள் தனது முகவரியை
 தொலைக்குபோதேல்லாம் - மீண்டும்
ஓவியனின் வீட்டுக்கு வந்துதான்
தேடிக்கொள்கிறது .



கோடுகளும் , வண்ணங்களும்
குழைத்து,பிழிந்து
கனவுகளாய் துரத்தும்போது ,
ஓவியப்பிரசவம் - ஓவியனின்
எந்த வழியை சொல்லும் ?

கதவுகள் இல்லாத
ஓவியனின் மனதை ,
வெறும் பார்வைகளின் கோணத்தில்
 அர்த்தம் தேடுவது
பாவத்தைவிடவும் மேலானது .


 ஓவியங்களை பார்ப்பவர்கள்
அதில் முகங்களை தேடுகிறார்கள் .
ஓவியத்தின் ஆன்மாவை - அங்கு
கொன்றுவிட்டு !

பல உலக  ஓவியனின்
வாழ்க்கைப்பாதையில் ,
பசியும் , தனிமையும்
ஓங்கி அறைந்து -
அவர்கள் உயிரை
பறித்து இருக்கிறது .
 ஆனால் ,
அந்த ஓவியங்கள்
ஏலத்தில்
பல கோடி பேரத்தில்
யாரோ ஒரு வீட்டு
வரவேற்பு  அறையில் ,
பிராயச்சித்தம் தேடி - அஞ்சலி
செலுத்திக்கொண்டு இருக்கிறது .

1 comment:

  1. நம்மளைபத்தி எழுதி இருக்கிறாப்ல தெரியுது... அருமை... அருமை!!

    2ம் 8ம் அற்புதம்!ஆன்மீக குறியீடு போலவே :)

    ReplyDelete