அவளின் நினைவாக
என்னிடம் இருக்கும்
பழைய நிழற் படங்கள் ,
கடிதங்கள் ,பரிசுகள்
என்ற பட்டியல் - என் அந்த
இளமையின் பதக்கம் .
வீடு வெள்ளை
அடிக்கும்போது ,
ஏதோ காணாமல்
தேடும்போது ,
வீடு மாறும்போது ,
குழைந்தைகளின் -கை பட்டு
சிதையும்போது ,
எத்தனை கிழிபட்டு
அடிபடுகிறது ?
என் அந்த இளமை காதல் !
அத்தனையுமே
பொறுத்து கொள்கிறேன் ...
வயதின் ஓசை
குறையும்போது
காதலின் நிறம்
மாறுகிறது ..
No comments:
Post a Comment