Friday, August 10, 2012

ஞாநியின் தரிசனம்…. .


உதிரும் பழுத்த இலைகளை
பார்க்கும்போதெல்லாம்
உள்ளுக்குள் ஏதோ ஒரு 
ஞாநியின் தரிசனம்…. .

 காலத்தின் சாட்சியாய் ,
 பருவங்களை கடந்த 
பக்குவத்தை சுமந்து 
ஐம்பூத அனுபவத்தில் அமிழ்ந்து 
ஆறாவது ஞானம் பெற்று ,
அடுத்த இலைக்கு உரமாகும் போனதால் 
மரணமில்லா பெருவாழ்வை தொட்ட 


அந்த இலையை
நான் ஞாநி என்றால்  உங்களுக்கு
கோபம் வரலாம் !

அடுத்தமுறை
பழுத்து சிவந்த
ஒவ்வொரு இலையையும் நீங்கள் 
உற்று பார்க்கும்போதெல்லாம்
உள்ளுக்குள் உணர்வீர்கள் !
ஏதோ ஒரு 
ஞானியின் தரிசனத்தை ...

1 comment: