Tuesday, December 27, 2011

தொலை தூரம் துரத்தும், துக்கம் 



வெகு நாளுக்கு 
பிறகு நாம் சந்தித்தோம் .
எப்போதும் போல 
நீயும் பேசவில்லை .
உனக்கும் குடும்பம் இருக்கிறது 
என்னைப் போல .

காதலுக்காக ,காதலை விட்டு கொடுத்த 
நம் வாழ்க்கை நம்மை பார்த்து 
என்ன சாதித்து விட்டீர்கள் 
என்று இந்த கடல் அலைகள் மூலம் வினவுகிறது .

உன் கணவரையும் 
என் மனைவியையும் 
நம் குழந்தைகளையும் 
நேசிக்க கற்று தந்திருக்கிறது 
என்று சொல்லவா ?

*என்றென்றும் அன்புடன் ,*
நம் காதல்


1 comment:

  1. அருமை... தொரடட்டும் இந்த நினைவுகள்... வழக்கமான நேசிப்பை கெடுத்துவிடாமல் :)

    ReplyDelete