Terri Gurrola is reunited with her daughter after serving in Iraq for 7 months.
மனிதனுக்குள் மனிதன்
பிறப்பின் மகத்துவம் புரியாமல்
போருக்கு வீரம் எனப் பெயரிட்டு
போட்டிப் போட்டுச் சாய்கிறீர்கள்
என்ன செய்தது உங்கள் வெற்றி ?
கழுவும் கையில் தின்றீர்கள்
கனவில் உறவு கொண்டீர்கள்
கைப் பிடித்து நடந்தீர்கள் !
எது வீரம் ? எது கோழைத்தனம் ?
ஒரு புயல் ? ஒரு சீற்றம் ?
ஒன்றாவது ஜெயிக்க முடியுமா
உங்கள் வீரத்தால் ?
மனிதன் மண் பொம்மை
இயற்கையின் மடியில் இருக்கும் வரை !
தரைக்கு வந்தால் நிற்க முடியாத
தவிடு பொடிதான் நீ சொல்லும் வீரம்.
எதிரிகள் யாருமில்லா உலகம்
எங்கும் இருக்கிறது - அதை உன்
உள்ளங்கைக்குள் அடக்காதே
உள்ளத்துக்குள் அடக்கு அது வசப்படும்.
வீரம் என்பது பயத்தின் வேசம்
மிருகத்தனத்தின் எச்சம்
எழுந்து நிறக்க நினைக்கும்
இந்த உலகத்தில் மனதின் ஒரே எதிரி !
No comments:
Post a Comment