நாளை புது வருடநாள்
எல்லோரும் வாழ்த்துவார்கள்
நானும் கூட ...
இனிப்புகள் இடம்மாறும்
இதயங்கள் பரிசலிக்கும்
தினமும் தேய்ந்த
நாட்காட்டிகள் விடைபெறும்
நாட்குறிப்பு பழசாகும்
புதிதாய் தீர்மானங்கள் பிறக்கும்
பழையது சலிக்கும்.
கோவில் கடவுள்கள்
கண்டுகொள்ளப்படுவார்கள்
ஆடைகளும்
ஆசைகளும் மாறிப்போகும்
நாளை இரவு
எல்லாம் மாறிவிட்டது
என்பதாய் எண்ணம் சொல்லும்
எப்போது என்று
இந்த வருடமும்
அதே மனம் கேட்கும் !
No comments:
Post a Comment