Tuesday, September 9, 2014

தோள்கள் ஏங்கி நிற்க்கிறது




(பாகிஸ்தானில் வெள்ள நிவாரணத்துக்குப் பங்களிப்புச் செய்தது இந்தியா!)

பூலோக கருவறையில்
ஒன்றாய் பிறந்தோமே 
என் இனிய பாகிஸ்தான் 
சகோதரா !

இயற்கைக்கு தெரியாது 
நீ பாக்கிஸ்த்தானி
நான் காஷ்மீரி
என்ற பேதம் ! 

ஆனால் ஓடி வந்தானே
உன்னால் ரத்தம் சிந்தினாலும் 
பரவாயில்லை - நாங்கள் 
அடித்தாலும் அண்ணன் தம்பியென்று !

நம் பழைய வரலாறு 
மதம் கொண்ட ரத்த சகதிதான் 
புதிய வரலாறு சொல்லட்டுமே
நாம் ஒரு தாய் மக்களெனெ !

வெள்ளம் அடித்து செல்லவில்லை 
கொடுத்து சென்று இருக்கிறது 
உனக்கும் எனக்கும் -இங்கு
உறவில் கரையில்லை என்றே !

ஓடி வா கலந்து நிற்ப்போம் 
பரங்கியனை விரட்டும் போது 
சேர்ந்த தோள்கள் ஏங்கி நிற்க்கிறது 
உன் எல்லைகளில் கை நீட்டி ...

3 comments:

  1. வணக்கம்
    மனித நேயம் வளரட்டும்... எங்கும் சம நிலை மலரட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மீண்டும் இணைந்திடுமா... இரும்புக் கைகள்.....

    ReplyDelete