வெகு தூரத்தில் என் மனம் ..
என் முன்னாள் காலம்
காலம்
வற்றாத நதியாய்
ஓடிக்கொண்டே இருக்கிறது
நான் மட்டும்
நதியின் நடுவே
வழுக்கும் பாறையாய்.
தேய்ந்து கொண்டே இருக்கிறேன் ...
சில சமயம்
நேற்றும் ,இன்றும்
ஒன்று போலவே
நகர்கிறது .
அழுந்திய மனம் மட்டும்
ஆற்றுவெள்ளத்தில் கூட
ஆட மறுக்கிறது
சில
மவுனங்களின்
கணத்தினால்.
No comments:
Post a Comment