தொலை தூரம் துரத்தும், துக்கம்
வெகு நாளுக்கு
பிறகு நாம் சந்தித்தோம் .
எப்போதும் போல
நீயும் பேசவில்லை .
உனக்கும் குடும்பம் இருக்கிறது
என்னைப் போல .
காதலுக்காக ,காதலை விட்டு கொடுத்த
நம் வாழ்க்கை நம்மை பார்த்து
என்ன சாதித்து விட்டீர்கள்
என்று இந்த கடல் அலைகள் மூலம் வினவுகிறது .
உன் கணவரையும்
என் மனைவியையும்
நம் குழந்தைகளையும்
நேசிக்க கற்று தந்திருக்கிறது
என்று சொல்லவா ?
*என்றென்றும் அன்புடன் ,*
நம் காதல்
அருமை... தொரடட்டும் இந்த நினைவுகள்... வழக்கமான நேசிப்பை கெடுத்துவிடாமல் :)
ReplyDelete